நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: தொடக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 
நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் துரைமுருகன், மு.க.ஸ்டாலின்
நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் துரைமுருகன், மு.க.ஸ்டாலின்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 12 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்ற தலைப்பிலான நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பொம்மைக்குட்டைமேடு என்ற பகுதியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை காலை 9.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். முன்னதாக மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் உருவப் படத்திற்கு, முதல்வர், அமைச்சர்கள், பேச்சாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வரவேற்று பேசினார்.

காலை 10 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கியது. முதலாவதாக திராவிட இயக்க என்ற தலைப்பில் சுப. வீரபாண்டியன் பேசினார். இதன் பிறகு மத்தியில் கூட்டாட்சி– மாநிலத்தில் சுயாட்சி–ஆ.ராசா, திமுக உருவாக்கிய நவீன தமிழ்நாடு – திருச்சி சிவா, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் – தங்கம் தென்னரசு, பெண்களின் கையில் அதிகாரம் – பர்வீன்சுல்தானா ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மதியம் 12 மணி உணவு இடைவேளைக்கு பின், வரலாற்றுச் சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மாலை 2.30 முதல் 3.30 மணி வரை மக்களோடு நில்: மக்களோடு வாழ் என்ற தலைப்பில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறார். அதன்பின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலை உரையாற்ற இருக்கின்றனர். பிற்பகல் 4 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறார்.

மாநாட்டு நிறைவில் சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் நன்றி தெரிவிக்க உள்ளார். இந்த மாநாட்டில், பல்வேறு துறை அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டு பந்தல் முன்பாக மறைந்த முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் சென்னை ரிப்பன் கட்டட முகப்பு வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 21 மாநகராட்சி, 159 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் திமுக சாா்பிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பிலும் வெற்றி பெற்ற சுமாா் 12 ஆயிரம் வாா்டு உறுப்பினா்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டு பந்தலை சுற்றிலும் கூடுதல் காவல் துறை தலைவர் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர்   தலைமையில் 13 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 400 ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் உள்பட 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com