டீசல் விற்கும் விலைக்கு இதெல்லாம் தேவையா? - ஜெயக்குமார் பேட்டி

வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். 
ஜெயக்குமார்
ஜெயக்குமார்

வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 'பொதுக்குழுவுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனெனில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோதிகளைத் தூண்டி எதிர் தரப்பினர் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

பொதுக்குழு கூட்டம் சட்ட ரீதியாக நடைபெறுவதால் சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுக்குழு நடைபெறாமல் இருக்க வேண்டாதவர்கள் முயற்சி செய்வதாகவும் அதைத் தடுக்கும் வகையில் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார்.

அரசு விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிமுக பொதுக்குழு நடைபெறும்' என்றார். 

மேலும் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சுற்றுப்பயணம் செல்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், தமிழகத்தில் தற்போது டீசல் விற்கும் விலைக்கு இதெல்லாம் தேவைதானா? ஆளாளுக்கு ஒரு வேனில் செல்கிறார்கள். உண்மையில், பணம், நேரம், எரிபொருள் என அனைத்தும் வேஸ்ட்தான்' என்று கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி அதிமுகவில் கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com