ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆக. 25-31 வரை முதற்கட்டத் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதற்கட்டத் தேர்வுகள் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதற்கட்டத் தேர்வுகள் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும், தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை இணையவழியாக மார்ச் 14ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்திடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏப்ரல் 26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

தற்போது ஆகஸ்ட் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள் 1-க்கு மட்டும் முதல்கட்ட தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தோ்வின் முடிவுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com