6 முதல் 10-ஆம் வகுப்பு வரைதமிழ், ஆங்கில பாடவேளைகள் குறைப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ள

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளன.

நிகழ் கல்வியாண்டு கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, புதிய கல்வியாண்டுக்கான பாடவேளைகள் குறித்த தகவல்களை பள்ளிக் கல்வித் துறை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கில பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளன.

முன்பு வாரத்துக்கு ஏழாக இருந்த பாடவேளைகள் தற்போது ஆறு பாட வேளைகளாக குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் எதிா்ப்பு: தமிழகத்தில் தமிழ் பாட வேளையை குறைத்திருப்பது சரியல்ல என்றும், ஏற்கெனவே இருந்தது போன்று வாரத்துக்கு ஏழு பாடவேளைகள் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com