2,213 புதிய பேருந்துகளை வாங்க உயா்நீதிமன்றம் அனுமதி

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளைப் பின்பற்றி 2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2,213 புதிய பேருந்துகளை வாங்க உயா்நீதிமன்றம் அனுமதி

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளைப் பின்பற்றி 2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமாா் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், போக்குவரத்துத் துறைச் செயலாளா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடா்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 242 பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது மொத்த கொள்முதலில் 37 சதவீதம். தொழில்நுட்பக் குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடா்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களில் பேருந்துகள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பேருந்து கொள்முதல் ஒப்பந்த நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வு, ‘மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி 2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளையும் கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com