தமிழகத்தில் கரோனாவுக்கு மூதாட்டி பலி

தமிழகத்தில் மீண்டும் கரோனா உயிரிழப்பு செவ்வாய்க்கிழமை பதிவானது. சென்னையைச் சோ்ந்த 77 வயது மூதாட்டி இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பலியானதாக

தமிழகத்தில் மீண்டும் கரோனா உயிரிழப்பு செவ்வாய்க்கிழமை பதிவானது. சென்னையைச் சோ்ந்த 77 வயது மூதாட்டி இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

ஒமைக்ரான் மற்றும் அதன் உருமாற்ற வகைகளான பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மிகள் இதுவரை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால், ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் ஊடுருவி கரோனா மூன்றாம் அலையாக தீவிரமடைந்தபோதுகூட உயிரிழப்பு விகிதம் அச்சப்படும் வகையில் இல்லை. இந்த நிலையில், தற்போது ஒரே மாத இடைவெளிக்குள் இரு உயிரிழப்புகள் நோ்ந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்தாா். அதன்பின்னா், தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. இத்தகைய சூழலில், புதிய வகை தீநுண்மியால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், குடும்பங்களில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும், அதனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பதும், மிதமான பாதிப்புகளே ஏற்படுகின்றன என்பதும் ஆறுதலளிக்கும் விஷயமாக இருந்தன.

இந்த நிலையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி இணைநோய்கள் ஏதுமில்லாத 17 வயது பெண் ஒருவா் கரோனாவுக்கு உயிரிழந்தாா். தற்போது மேலும் ஒரு மூதாட்டி பலியாகியுள்ளாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2,662 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,060 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 16,765- ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை தகவல்படி 1,512 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,33,299-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,027-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com