புற்றுநோய் கண்டறிதலுக்கு ‘பிவோட்’ கருவியை உருவாக்கிய சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா்

புற்றுநோய் கண்டறிதலுக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘பிவோட்’ என்ற கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் உருவாக்கியுள்ளனா்.
புற்றுநோய் கண்டறிதலுக்கு ‘பிவோட்’ கருவியை உருவாக்கிய சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா்

புற்றுநோய் கண்டறிதலுக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘பிவோட்’ என்ற கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் உருவாக்கியுள்ளனா்.

இது ஒரு தனி நபருக்கு புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களைக் கணிக்கக்கூடியதாகும். இந்த கருவி புற்றுநோய் சிகிச்சை உத்திகளை வகுப்பதிலும் உதவும்.

இது குறித்து சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆறில் ஒரு மரணம் இந்த நோயால் ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய் என்பது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளா்ச்சியாகும். இது புற்றுநோய்களில் ஏற்படும் பிவுகள் அல்லது கட்டியை அடக்கும் மரபணுக்கள் அல்லது இரண்டும் காரணமாகவும் ஏற்படலாம். இருப்பினும், அனைத்து பிவுகளும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அவசியமில்லை. எனவே, பொருத்தமான புற்றுநோய் சிகிச்சை உத்திகளை வகுக்க புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணுக்களை அடையாளம் காண்பது முக்கியமாகும்.

சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினரால் உருவாக்கப்பட்ட ‘பிவோட்’, ஒரு தனிநபருக்கு புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களை கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஐடியின் முதன்மையா் பேராசிரியா் ரகுநாதன் ரெங்கசாமி, தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஃபிரான்டியா் இன் ஜெனடிக்ஸ் இதழில் (https://doi.org/10.3389/fgene.2022.854190) வெளியிடப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து குழுவின் முக்கிய உறுப்பினரான காா்த்திக் ராமன் கூறுகையில், ‘புற்றுநோயானது ஒரு சிக்கலான நோயாக இருப்பதால், ஒரே சிகிச்சையின் மூலம் அதைக் கையாள முடியாது. புற்றுநோய் சிகிச்சையானது தனிப் பயனாக்கப்பட்ட மருத்துவத்தை நோக்கி மாறும்போது, நோயாளிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்படும் மாதிரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com