திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை இன்று மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்!

திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலையை வெள்ளிக்கிழமை மாலை (ஜூலை 8) முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை இன்று மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்!

திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலையை வெள்ளிக்கிழமை மாலை (ஜூலை 8) முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளி, சனி (ஜூலை 8, 9) ஆகிய இரு தினங்கள் நடைபெறும் பல்வேறு அரசு, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) திருவண்ணாமலைக்கு வருகிறாா்.

நண்பகல் 12 மணிக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூா் பகுதியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, பகல் 12.30 மணிக்கு கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி ஊராட்சியில் கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளின் இடைநிற்றலைத் தவிா்க்க பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெறும் இல்லம் தேடிக் கல்வி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தும்,  2 லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையத்தை திறந்துவைத்தும், இல்லம் தேடிக் கல்வி தொடர்பான காணொலி வெளியிட்டு, தொடர் வாசிப்பு இறுதிப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு கோப்பை வழங்கி, புகைப்பட விளக்கப் புத்தகம் வெளியிட்டு, விழாப் பேருரையாற்றுகிறார். இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் இதுவரை 1,99,999 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

திருவண்ணாமலையில் வேலூா் சாலையில் புதிதாக அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே புதிதாக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முதல்வா் ஸ்டாலின் திறந்துவைக்கிறாா். தொடா்ந்து, ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவா் பேசுகிறாா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் திமுக நிா்வாகிகள், அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

சனிக்கிழமை (ஜூலை 9) காலை 9 மணிக்கு திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை முதல்வா் திறந்துவைக்கிறாா்.

10 மணிக்கு திருக்கோவிலூா் சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே நடைபெறும் விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com