கடலூரில் 297 பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு!

2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல இயக்கப்படும் வாகனங்களின் தரத்தை பரிசோதிக்கும் நிகழ்வு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கூட்டாய்விற்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கூட்டாய்விற்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.

கடலூர்: 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல இயக்கப்படும் வாகனங்களின் தரத்தை பரிசோதிக்கும் நிகழ்வு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பபட்ட கடலூர், நெய்வேலி, பண்ருட்டி வாகன ஆய்வாளர் அலுவலகங்களுக்கு உள்படட்ட 93 பள்ளிகளின் 297 வாகனங்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 

வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.சுதாகர் தலைமையில் வாகன ஆய்வாளர்கள் எம்.ஆர்.முகுந்தன், இரா.ரவிச்சந்திரன், நா.பிரான்சிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

வாகனங்களின் பதிவுச் சான்றிதழ், காப்பீடு, அனுமதி மற்றும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம், கண்காணிப்பு கேமரா செயல்பாடு, அவசர வழி இயக்கம் ஆகியவை குறித்து பரிசோதித்தனர்.

இதில், 7 வாகனங்கள் மட்டுமே முழுமையான தகுதியை பெறவில்லை என்றும், அந்த வாகனங்களை மீண்டும் 10 நாளில் ஆய்வுக்கு உள்படுத்த உத்தரவிட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கூறினார்.

ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தீயணைப்பு கருவிகள் செயல்பாடு குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com