சென்னை திருவொற்றியூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனை

இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கிறிஸ்துவப் பள்ளி வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 
சென்னை திருவொற்றியூர்  காலடிப்பேட்டையில் கிறிஸ்துவப் பள்ளி வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள்..
சென்னை திருவொற்றியூர்  காலடிப்பேட்டையில் கிறிஸ்துவப் பள்ளி வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள்..


சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கிறிஸ்துவப் பள்ளி வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

ஈத் பெரு நாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் தேரடி பகுதி உள்ளிட்ட பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை கூட்டுப் பிரார்த்தனையின் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மார்க்கம் சகோதரத்துவம் மற்றவர்களுக்கு உதவும் குணம் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.  ஐந்து வேளை தொழுகை உள்ளிட்ட அனைத்து கோட்பாடுகளையும் கடைபிடித்து சந்தோஷமாக வாழ வேண்டும், நாட்டு மக்கள் அனைவரையும் கரோனா உள்ளிட்ட எந்தவொரு தொற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com