பாதுகாப்பான இடங்களுக்கு செல்க... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தலா 25 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரிக்கு வரும் நீரின் அளவானது 21 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கே.ஆர்.எஸ் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. 

இதனால் காவிரி ஆற்றில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி வரை நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கனமழை, வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com