காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை

காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் அருவியில் குறிக்கவும் தடை விதித்துள்ளார்.

கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்த வண்ணமாக உள்ளதால், அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமார் 30000 கன அடி நீர் சனிக்கிழமை வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரற்றானது சனிக்கிழமை நிலவரப்படி 6 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், கர்நாடக அணைகளின் நீர் திறப்பினால் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, சினி அருவி ,ஐவர் பானி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தடைவிதித்துள்ளார்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவல்துறை மற்றும் வருவாய் துறையினரால் திடீரென வெளியேற்றப்பட்டும், வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மற்றும் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தடை உத்தரமாய் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டும், காவிரி கரையோர பகுதிகளான மாமரத்து கடவு பரிசல் துறை நாகர்கோவில், முதலைப் பண்ணை ,ஆலம்பாடி, சின்னாறு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com