இபிஎஸ் தேர்வு: ஈரோட்டில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இபிஎஸ் தேர்வு: ஈரோட்டில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

ஈரோடு:  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து,  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார் தலைமை வகித்தார்.

அவர் கூறுகையில் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொண்டர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அதிமுகவை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரைவில் அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் வருவதற்கும் பெரிதும் உதவும்.

மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும், தலைவர்கள் கண்ட கனவான தமிழகத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல எடப்பாடி பாடுபடுவார் என்ற நம்பிக்கை அனைத்து தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் உள்ளது. கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார். 

முன்னதாக தொண்டர்கள் பட்டாசு வெடிப்பதை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். பிறகு தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பட்டாசு வெடிக்க அனுமதித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், மாணவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், 46 புதூர் பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் விவசாய பிரிவு இணைச் செயலாளர் நல்லசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சோலார் லோகநாதன், பெரியார் நகர் பகுதி சூரிய சேகர், வீரப்பன் சத்திரம் நகர எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மூர்த்தி, மெடிக்கல் ஆனந்தன், கலையரசன்,சேனாதிபதி, கஸ்தூரி, கே ஆர் இ பொங்கி, முஸ்தபா, ராஜேஸ்வரி விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com