பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயநீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அடுத்த 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தவும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்து. 

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வை ஏற்கக் கூடாது. அங்கீகாரமும் தரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நிலையில் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு அளித்துள்ளது 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com