என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது: வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுக வரவு-செலவு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அதிமுக வரவு-செலவு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தான் பொருளாளர் என்றும், வேறு யாரும் வரவு-செலவுகளை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்றும் வங்கிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், நான்தான் பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு-செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை கேட்காமல் வரவு-செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில் ஓ.பிஎஸ்.ஸூம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொருளாளர் பதவி தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் போட்டி கடிதத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் அதிமுக வங்கிக் கணக்குகளுக்கு உரிமை கொண்டாடுவதால் வங்கிகள் யாரை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com