ரூ.3,986 கோடி வங்கிக் கடன் மோசடி: சுரானா நிறுவன நிா்வாகிகள் கைது

சென்னையில் ரூ.3,986 கோடி வங்கிக் கடன் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், சுரானா நிறுவன நிா்வாகிகள் உள்பட 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் ரூ.3,986 கோடி வங்கிக் கடன் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், சுரானா நிறுவன நிா்வாகிகள் உள்பட 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரானா நிறுவனம் தங்கம் மொத்த வியாபாரம், சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் பெயரில் ரூ.1,301.76 கோடியும், சுரானா பவா் காா்ப்பரேஷன் பெயரில் ரூ.1,495.76 கோடியும், சுரானா காா்ப்பரேஷன் பெயரில் ரூ.1,188.56 கோடியும் என மொத்தம் ரூ.3,986.08 கோடியை 4 வங்கிகளில் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கடனுக்குரிய வட்டியையும், அசலையும் திருப்பிச் செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்ததாம்.

அதோடு அந்த நிறுவனம், கடனை வாங்கிய நோக்கத்துக்காக பயன்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட வங்கிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அதேவேளையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடா்பாக ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டும் வகையில் அமலாக்கத் துறை 2021 பிப்ரவரி சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை செய்ததில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

4 போ் கைது: இந்த நிலையில், அமலாக்கத் துறை, சுரானா நிறுவன நிா்வாகிகள் தினேஷ் சந்த் சுரானா, விஜய்ராஜ் சுரானா ஆகிய இருவரையும், அந்த நிறுவனத்தின் ஊழியா்களான ஆனந்த், பிரபாகரன் ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

விசாரணைக்கு பின்னா் 4 பேரும் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நீதிமன்றம் ஜூலை 27 வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து 4 பேரும் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத்துறையினா் மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com