நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வலுத்து வரும் தென் மேற்குப் பருவ மழை!

நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் தடை பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் தடை பட்டுள்ளது.

நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

கேரளம் மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உதகை. குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சாலையில் நிறுத்தப்பட்டிருந்து கார் மீது வேரோடு சாய்ந்து கிடக்கும் மரம்.

தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக தொடர்ந்து மரங்கள் வேரோடு சாய்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின் கம்பங்களும் உயர் அழுத்த மின் கம்பிகளும் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் தடை பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. 

தொடா்ந்து பெய்து மழை காற்றுக்கு சாலையில் சாய்ந்து கிடக்கும் மரங்கள்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான அதிகளவிலான மழை விபரம் வருமாறு (அளவு மி.மீரில்):

கூடலூர் - 227, மேல் கூடலூர்- 224, அவலாஞ்சி - 195, மேல் பவானி - 179, தேவாலா -163, நடுவட்டம்-147, பந்தலூர் -123, கிளன்மார்கன் - 115, சேரம்பாடி - 89,  குந்தா - 73, எமரால்டு - 63,  உதகை - 45.3 மி. மீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com