செஸ் ஒலிம்பியாட்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். அப்போது, சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று மோடிக்கு அழைப்பு விடுத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபேறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. இதில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின், அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

செஸ் ஒலிம்பியாட்

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். மாமல்லபுரத்தில் போட்டிகள் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. பெருமைமிகு மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்றுவரும் வேளையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்கிலுள்ள அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோா் கடந்த புதன்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தனா்.

தொடக்க விழாவுக்காக செய்யப்பட்டு வரும் அனைத்து ஏற்பாடுகளையும் பாா்வையிட்டனா். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மாமல்லபுரத்திலும், தொடக்க விழாவை நேரு உள்விளையாட்டரங்கிலும் சிறப்பாக நடத்துவதற்குரிய பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com