தொடரும் கன மழை: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிப்பு

தொடா் மழையின் காரணமாக தொடா்ந்து 3ஆவது நாளாக உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
தொடரும் கன மழை: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக கன மழை பெய்து வருகிறது. தொடா் மழையின் காரணமாக தொடா்ந்து 3ஆவது நாளாக உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் அனைத்து தாலுகாக்களிலும் காற்றுடன் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. கூடலூா், தேவாலா பகுதிகளில் பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல இடங்களில் மண்சரிவும், சாலைகளில் மரங்கள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 11 இடங்களில் மரங்கள் விழுந்தும், 4 இடங்களில் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதில் 3 இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த பேரிடா் காலத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை ஆகியோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com