தந்தையும், மகனும் எழுதும் நீட் தேர்வு

முதன் முறையாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் நீட் தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அத்துடன் தந்தை, மகன் இருவரும் தேர்வு எழுத வந்த ஆச்சர்யமும் அரங்கேறியது. 
தந்தையும், மகனும் எழுதும் நீட் தேர்வு

முதன் முறையாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் நீட் தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அத்துடன் தந்தை, மகன் இருவரும் தேர்வு எழுத வந்த ஆச்சர்யமும் அரங்கேறியது. 

திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக நீட் தேர்வு எழுதுவதற்கு 5 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் திருவாரூரில் மூன்று பள்ளிகளிலும் திருத்துறைப்பூண்டியில் ஒரு பள்ளியிலும் கூத்தாநல்லூரில் ஒரு பள்ளியிலும் என மொத்தம் ஐந்து தேர்வு மையங்களில் நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் காலை 11:15 மணியளவில் இருந்து மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை முதல் மாணவர்கள், பெற்றோர்கள் நீட் தேர்வு எழுதும் மையத்திற்கு ஆர்வத்துடன் வரத் தொடங்கினர். முன்கூட்டியே மாணவிகள் தங்கள் உடலில் அணிந்து இருந்த நகைகளை பெற்றோர்களே கழற்றி வைத்துக் கொண்டனர். 

திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து தேர்வு மையங்களில் 1429 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்விற்கு அனுமதிக்கப்படும் மாணவ மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் முகக் கவசம், எழுதுகோல், அணிகலன்கள் போன்றவற்றை உள்ளே எடுத்து வர அனுமதி இல்லை. முகக்கவசம் தேர்வு வளாகத்திற்குள் வழங்கப்படுகிறது. எழுதுகோலும் அங்கேயே வழங்கப்படுகிறது. அதனை பயன்படுத்தியே மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். 

மாணவ மாணவிகள் ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாட்டர் பாட்டில் மற்றும் சானிடைசர் மட்டும் தேர்வு அறைக்குள் எடுத்து வர அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக மாணவ மாணவிகளுக்கு பயோமெட்ரிக் முறையான புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்வு, மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. அருகில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் தேர்வு எழுத வருகை தந்துள்ளனர்.

திருவாரூர் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் தந்தை, மகன் இருவரும் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுத வந்த வந்தனர். திருத்துறைப்பூண்டி வேளூர் பகுதியைச் சேர்ந்த காத்தையன் (50) என்பவர் ப்ளஸ் டூ முடித்துவிட்டு கோவில் பணிகளில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது முதன் முறையாக நீட் தேர்வு எழுத வந்துள்ளார். அவரது மகன் குமரன் பி.எஸ்.சி தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுத வருகை தந்துள்ளார். தந்தை மகன் இருவரும் ஒரே தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுத வந்தது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. 

இதுகுறித்து தந்தை காத்தையன் கூறுகையில் நான் மிகச் சிறப்பாக வீட்டிலேயே இந்த தேர்வுக்காக தயாராக இருக்கிறேன். இந்த நீட் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற்று 5 வருடங்கள் படித்து மக்களுக்கு கண்டிப்பாக சேவையாற்றுவேன். நான் டாக்டராக வேண்டும் என்பது என் தாய் தந்தையரின் கனவு அதை நிறைவேற்ற கிடைத்திருக்கக்கூடிய வரப்பிரசாதமாக நீட் தேர்வை நான் கருதுகிறேன் என்று கூறினார். காத்தையன் 1992 ஆம் ஆண்டு கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com