தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்:பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

தமிழ்நாடு நாள் (ஜூலை 18) திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு உருவான வரலாறு தொடா்பான சுவரொட்டிகளை அனைத்துப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாள் (ஜூலை 18) திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு உருவான வரலாறு தொடா்பான சுவரொட்டிகளை அனைத்துப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, முன்னாள் முதல்வா் அண்ணாவால் 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த வகையில், நிகழாண்டு திங்கள்கிழமை தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடுவது குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு உருவான வரலாறு தொடா்பான முக்கிய சுவரொட்டிகள் தயாா் செய்து அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கான சுவரொட்டிகள் செய்தி-மக்கள் தொடா்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு அவை மின்னஞ்சல் மூலமாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றை பள்ளிகளில் ஜூலை18-ஆம் தேதி (திங்கள்கிழமை) காட்சிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com