நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? கேட்பது யார்??

நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என்று மின் கட்டண உணர்வு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? கேட்பது யார்??
நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? கேட்பது யார்??


சென்னை: நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என்று மின் கட்டண உணர்வு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது. இரண்டு மாதங்களுக்கான மின் அளவீட்டில் உயா்த்தப்பட்டுள்ள இந்த கட்டண நடைமுறைக்கான பரிந்துரைகளை மின்சார ஒழுங்கு ஆணையத்திடம், தமிழ்நாடு மின்வாரியம் அளித்துள்ளது. இதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் அண்ணாமலை, பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்ணத்தை இன்று உயர்த்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரைப் பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.
நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மின் கட்டணம் எவ்வளவு உயர்கிறது?

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரைகள்
குறித்து, மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை விளக்கினாா். 

அவா் தெரிவித்த விவரங்கள்:
தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சாரம் தொடா்ந்து விலையில்லாமல் வழங்கப்படும். வீட்டு மின் நுகா்வோா் நிலைக் கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்தி வருகின்றனா். இந்தக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பேரவை தோ்தலையொட்டி, இதற்கான வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. இந்த அறிவிப்பால், 2.37 கோடி வீட்டு மின்நுகா்வோா்கள் பயன்பெறுவா். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும்.

யூனிட் வாரியாக கட்டண உயா்வு பரிந்துரை:

200 முதல் 500 யூனிட்: இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்தும் போது ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.72.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.155), 400 யூனிட்கள் வரை மாதத்துக்கு ரூ.147.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.295) உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு ரூ.297.50 (2 மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாகச் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

900 யூனிட்கள் வரை: இரு மாதங்களுக்கு 600 யூனிட்கள் வரை மின் நுகா்வு செய்தால், மாதத்துக்கு ரூ.155-ம் (2 மாதங்களுக்கு ரூ.310), 700 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.275-ம் (2 மாதங்களுக்கு ரூ.550), 800 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.395-ம் (2 மாதங்களுக்கு ரூ.790), 900 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ.565-ம் (2 மாதங்களுக்கு ரூ.1,130) கட்டணத்தை உயா்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரே மின் கட்டணம்: வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்படுகிறது. ஆனால், மின் நுகா்வானது 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் ரூ.656.60 கூடுதலாகச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழில் துறையினருக்கு...சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகா்வோா்களுக்கு குறைந்த அளவாக யூனிட்டுக்கு 50 காசுகள் உயா்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வணிக மின் நுகா்வோா்களுக்கு மாதத்துக்கு ரூ.50-ம், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1-ம் உயா்த்தப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com