மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர் மீது கனரக வாகனம் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

காய்கறி லாரிக்கு பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர் மீது கனரக வாகனம் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறிகளை ஏற்றி வந்த கனரக லாரியை ஊழியர் ஒருவர் ஸ்கேன் செய்யும் போது காய்கறி லாரிக்கு பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை நாளுக்கு நாள் பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. ஏற்கனவே, முறையாக அரசு விதிமுறைக்கு அப்பாற்பட்டு கட்டப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டு முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு டிஆர்எம் வெஜிடபிள்ஸ் என்ற பேர் கொண்ட காய்கறிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்த போது, சுங்கச்சாவடியை கடந்து செல்ல கட்டணம் வசூல் செய்வதற்கு நிறுத்தப்பட்டிருந்தது. 

அப்போது ஃபாஸ்ட் டேக் சரியாக செயல்படாததால் ஊழியர் ஒருவர் தான் வைத்திருக்கும் ஸ்கேனிங் கருவி மூலம் கனரக வாகனத்தில் ஒட்டப்பட்டு இருந்த ஃபாஸ்ட்ராக் கோடு லேபிளை ஸ்கேன் செய்ய முயன்ற போது நின்று கொண்டிருந்த காய்கறி சரக்கு லாரி மீது பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியதில் காய்கறி லாரியை ஸ்கேன் செய்து கொண்டிருந்த ஊழியர் தடுப்பை தாண்டி தூக்கி வீசப்பட்டார்.

இதில், அதிர்ஷ்டவசமாக சுங்கச்சாவடி ஊழியர் உயிர் தப்பினார். லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த விபத்து குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறிகளை ஏற்றி வந்த கனரக லாரியை ஊழியர் ஒருவர் ஸ்கேன் செய்யும் போது காய்கறி லாரிக்கு பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com