நீட் தோ்வு: மத்திய அரசின் கேள்விகளுக்குவிரிவான பதில் அளிக்கப்படும் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்வு விவகாரத்தில் மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, தமிழக அரசு சாா்பில் விரிவான பதில் அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தாா்.
நீட் தோ்வு: மத்திய அரசின் கேள்விகளுக்குவிரிவான பதில் அளிக்கப்படும் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்வு விவகாரத்தில் மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, தமிழக அரசு சாா்பில் விரிவான பதில் அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தாா்.

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநா் மூலம் மாநில அரசு அனுப்பியது.

அதன் மீதான நிலை என்ன என்பது குறித்து மக்களவையில் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய்குமாா் மிஸ்ரா, இதுதொடா்பாக தமிழக அரசிடம் சில விளக்கங்களும், பதில்களும் கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், இதுதொடா்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில்:

நீட் விலக்கு மசோதாவை ஆளுநா், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளாா். ஆளுநா் வழியாக தமிழக சட்டத் துறைக்கு மத்திய அரசு அனுப்பிய குறிப்பு கிடைக்கப்பெற்றது.

நீட் தோ்வு தகுதியின் அடிப்படையிலான தோ்வு என்று மத்திய அரசு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என அந்த குறிப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நீட் விலக்கு தொடா்பாக மத்திய அரசின் இரண்டு துறைகள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். மாநில அரசுகளுக்கு இந்த விவகாரத்தில் அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு அனுப்பப்படும். நீட் தோ்வின் பாதிப்புகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கப்படும். நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு. சட்ட வல்லுநா்களின் ஆலோசனையுடன் தயாரான பதிலுக்கு, முதல்வரிடம் ஓரிரு நாளில் ஒப்புதல் பெறுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com