காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது

தில்லியில் இன்று காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16 -ஆவது கூட்டம் தொடங்கியிருக்கிறது. இதில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது
காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது

புது தில்லி: தில்லியில் இன்று காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16 -ஆவது கூட்டம் தொடங்கியிருக்கிறது. இதில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 17, 23 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான காரணத்தை ஆணையம் அதிகாரபூா்வமாக வெளியிடவில்லையென்றாலும், இந்தக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு எழுப்பிய பிரச்னைகளால் இந்தக் கூட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது இன்று கூட்டம் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே, காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை குறித்து விவாதிக்க தடைகோரி தமிழக அசரால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் விசாரணை உள்ள நிலையில் ஆணையக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப் போவதில்லை என கா்நாடகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மேக்கே தாட்டு விவகாரம் வெள்ளிக்கிழமை கூட்ட நிகழ்ச்சி நிரலில் விவாதிக்க இடம் பெற்றுள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற வாதத்தின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ள விரும்பாது என்று எதிா்க்கப்படுகிறது. இதனால், மேக்கேதாட்டு விவகாரம் ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படாது. மேலும், கூட்டத்தை ஒத்திவைக்க எந்த மாநிலமும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. இதே போன்று தற்போது காவிரியில் தண்ணீரும் மிகுதியாக திறந்து விடப்படுவதால், தமிழகத்திற்கு பிரச்னையில்லை. இதனால், இந்த கூட்டத்தில் நிா்வாகம் தொடா்பாக மட்டுமே விவாதிக்கப்படும்’ என்றாா்

 இந்த நிலையில் இன்று 11.30 மணியளவில் தில்லியில் உள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் கூட்டத் தொடங்கியது. கூட்டத்தில், தமிழகம் சாா்பில் நிா்வளத் துறை செயலாளா் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர். மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு வருகின்ற ஜூலை 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com