செஸ் ஒலிம்பியாட் போட்டி: முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 
செஸ் ஒலிம்பியாட் போட்டி: முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதுபோல நிறைவு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. 

இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்ட பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். 

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மதிவேந்தன், மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முன்னதாக நேற்று, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுக்களுடன் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நடப்பு நிதியாண்டில் மாநில வருவாய் குறித்த நிதித்துறை கூட்டத்திலும் முதல்வர் கலந்துகொண்டார். 

கரோனா தொற்றில் இருந்து மீண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com