
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரா் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா். அவரது சாதனைக்கு வாழ்த்துகள்.
இதையும் படிக்க | உக்ரைன் மருத்துவ மாணவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. இதற்கு முன்பு கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதன் பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் 23 வயதான நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியா்களுக்கு பெருமையளிக்கும் விஷயம்.