மின்சார மீட்டருக்கு வாடகை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதற்கு, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதற்கு, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மின்சாரக் கட்டணத்தை உயா்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீா்மானித்துள்ளது. நகா்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டா்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்பட உள்ள ஸ்மாா்ட் மீட்டா்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது.

இது மக்கள் மீதான பொருளாதார தாக்குதலாகும். ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் பயன்பாட்டை கணக்கிட வேண்டியது மின்வாரியத்தின் பணி. அதற்கான செலவை மக்கள் மீது சுமத்தக்கூடாது. இன்றைய நிலையில் ஒரு டிஜிட்டல் மீட்டரின் விலை ரூ.749 முதல் ரூ.2 ஆயிரம் வரை மட்டும் தான். அதற்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வாடகை என்பது அநீதி.

அதேபோல், ஒரு ஸ்மாா்ட் மீட்டரின் இன்றைய விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை. இந்தியாவுக்கு குறைந்தது 30 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள் தேவைப்படும் நிலையில், அவற்றை அதிக அளவில் தயாரிக்கும் போது, ஒரு மீட்டரின் விற்பனை விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் என்ற அளவுக்கு குறையும். அவ்வாறு இருக்கும் போது அதற்காக இரு மாதங்களுக்கு ரூ.350 வாடகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

எனவே, மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com