சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
கடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி
கடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி


சிதம்பரம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயிலில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது .

மேலும், கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூருக்கு வந்த அதிக அளவு நீரால் அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித் துறையினர் கடந்த 15 ஆம் தேதி காவிரியில் உபரி நீரை வெளியேற்றினர். 

இதனைல் கல்லணை வந்தடைந்த உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு ஜூலை 17 ஆம் தேதி வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவான 9 அடி தேக்கப்பட்டு உபரி நீர் வினாடிக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் கன அடி வீதம் ஜூலை 19 ஆம் தேதி கடலுக்கு அனுப்பப்பட்டது. 

முழு கொள்ளளவை எட்டிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி.

மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரியை முழுவதுமாக நிரப்பதற்கு முடிவு செய்து ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தொடர்ந்து கடந்த ஐந்து நாள்களாக அனுப்பினர். இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதாவது 1465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. 

விவசாய பணிகள் இந்த பகுதியில் தொடங்கப்படாததால் சென்னைக்கு மட்டுமே வினாடிக்கு 63 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 2005 கன அடி வீதம் தண்ணீர் கீழணையிலிருந்து தண்ணீர் வருகிறது. ஏரியிலிருந்து விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் பட்சத்தில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலஙகள் பயன் பெறும் என கூறப்படுகிறது. 

தற்போது கீழணையில் 9 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. வடக்கு ராஜன் வாய்க்காலில் 150 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்கால் 150 கன அடியும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள கடலுக்கு வினாடிக்கு 8,983 கன அடி தண்ணீர் செல்கிறது.

தொடர்ந்து கடந்த ஐந்து நாள்களாக காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை, கீழணை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com