ஆடி அமாவாசை: வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம்

ஆடி அமாவாசையையொட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பில்  ஏராளமான மக்கள் வியாழக்கிழமை புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கடலில் நீராடல் செய்த மக்கள்
வேதாரண்யம் கடலில் நீராடல் செய்த மக்கள்


வேதாரண்யம்: ஆடி அமாவாசையையொட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பில்  ஏராளமான மக்கள் வியாழக்கிழமை புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அர்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கடலில் நீராடல் செய்த மக்கள்

அந்த வகையில், நிகழாண்டு ஆடி அமாவாசை நாளான வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் அதிகாலை தொடங்கி புனித நீராடல் செய்தனர்.

கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் (நீர்சடங்கு) செய்தனர். பின்னர் அங்குள்ள சித்தர் கோயில், ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனர்.

கடல் பரப்பில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்.

அதேபோல், வேதாரண்யம் சன்னதி கடல் பரப்பில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் இறைவனை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com