ஆடி அமாவாசை: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

ஆடி அமாவாசையை ஒட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

ஆடி அமாவாசையை ஒட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஆடி அமாவாசை நாளில் தீா்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீா் இறைத்து அவா்களின் தாகத்தை தீா்க்க வேண்டும் என்பது ஐதீகம். அவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கி அவா்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு பிண்டம் பிடித்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் இன்று காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை அமராவதி ஆற்றில் கரைத்தனர். 

தொடர்ந்து அமராவதி ஆற்றில் புனித நீராடினர். அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். 

இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com