ஆடி அமாவாசை: பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வழிபாடு நடத்தினர்.
தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும்,  தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும்,  தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


ஆடி அமாவாசையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வழிபாடு நடத்தினர்.

தமிழக முழுவதும் இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர் நிலைகளில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

இந்து முன்னணி சார்பில் வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு.

அதேபோல் வாலாஜாபேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குளத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது இந்து முன்னணி சார்பில் ஏற்பாட்டில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. 

இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது வாலாஜாபேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் பாகவதர் தர்ப்பணம் நிகழ்வுகளை இலவச சேவை செய்து வருகிறார். 

ஆடி மாத அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு வியாழக்கிழமை காலை முதலே பாலாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிகழ்வில் திரளான இந்து சமய பெரியோர்கள் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

இதில், இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் டி. வி. ராஜேஷ், மாவட்ட செயலாளர் எஸ். கே. மோகன்,  தர்ப்பணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும்,  தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com