செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடி வருகையில் தாமதம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பிரதமா் நரேந்திர மோடி போட்டியைத் தொடக்கிவைக்கிறார். 

இதற்காக குஜராத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை வருவதாக இருந்த அவரது பயணத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படுவதாக இருந்த நிலையில் சற்று தாமதமாக 3.10க்கு புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர் சென்னைக்கு மாலை 4.45க்கு பதிலாக 5.10க்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தொடக்க நிகழ்ச்சி சற்று தாமதமாக தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com