வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிப்பு: எம்.பி. ரவிக்குமார்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவது குறித்து விவாதிக்க விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்
மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

மக்களவையின் இன்றைய அலுவல்களை ஒத்திவைத்து, தமிழ் புறக்கணிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அளித்துள்ள நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது:

“வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளின் பல்வேறு இருக்கைகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கான விளம்பரத்தை ஐசிசிஆர் வெளியிட்டுள்ளது.

ஆனால், போலந்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளுக்கு விண்ணப்பிக்க அதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. போலந்து நாட்டில் இருக்கும் தமிழ் இருக்கைகளுக்கான பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இது தெளிவான பாரபட்சத்தைக் காட்டுகிறது.

இந்தப் பிரச்னையை விவாதிக்க அவையின் அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com