மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? உச்ச நீதிமன்ற கேள்விக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு பதில்

ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? உச்ச நீதிமன்ற கேள்விக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு பதில்
மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? உச்ச நீதிமன்ற கேள்விக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு பதில்


புது தில்லி: ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு வாய்ப்பில்லை என்ற இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, ஓ. பன்னீர்செல்வம்  - எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு வாய்ப்பில்லை என இரு தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக மொத்தம் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளீர்கள் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கடந்த 11அஆம்தேதி பொதுக்குழுவில் என்ன நடந்தது? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல தீவிரமாக முடிவுகள் பொதுக் குழுவில் எடுக்கப்பட்டன என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக் குழு வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும். ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை நாட ஓ. பன்னீர்செல்வத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 3 வாரங்களுக்குள் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை குறித்து விசாரணை நடத்தி சென்னை உயர் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும், என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com