44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் சுற்றில் யார் யாருடன் மோதுகின்றனர்?

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்க உள்ளது. அதற்கான முதல் சுற்று அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் சுற்றில் யார் யாருடன் மோதுகின்றனர்?

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்க உள்ளது. அதற்கான முதல் சுற்று அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர். 

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைசாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகிரண், நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, சேதுராமன் ஆகிய 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். 

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்க உள்ளது. மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளதால், கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆடவா் அணிக்கு கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டன. முதல் சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிா் பிரிவில் 162 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், முதல் சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றின் ஓபன் பிரிவில் இந்திய 'ஏ' அணி - ஜிம்பாப்வே அணியுடனும், பெண்கள் பிரிவில் 'ஏ' அணி தஜிகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. 

முதல் சுற்றைப் பொறுத்தவரை ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய 'ஏ' அணி - ஜிம்பாம்பே அணியையும், இந்திய 'பி' அணி - ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், இந்திய 'சி' அணி - தெற்கு சூடான் அணியுடன் மோதுகின்றது.

பெண்கள் பிரிவைப் பொறுத்தவரை, இந்திய 'ஏ' அணி - தஜிகிஸ்தான் அணியையும், இந்திய 'பி' அணி - வேல்ஸ் அணியையும், இந்திய 'சி' அணி - ஹாங்காங் அணியையும் எதிர்கொள்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com