விற்பனையாகாத 2 டன் தக்காளிகளை கீழே கொட்டிய விவசாயிகள்!

தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக கீழ்பவானி வாய்க்கால் கரையில் விற்பனையாகாத 2 டன் தக்காளிப் பழங்களை விவசாயிகள் கீழே கொட்டிவிட்டுச் சென்றனர். 
விற்பனையாகாத 2 டன் தக்காளிகளை கீழே கொட்டிய விவசாயிகள்!

தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக கீழ்பவானி வாய்க்கால் கரையில் விற்பனையாகாத 2 டன் தக்காளிப் பழங்களை விவசாயிகள் கீழே கொட்டிவிட்டுச் சென்றனர். 

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளிப் பழங்கள் செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு விற்பனைக்காக ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ தக்காளி இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் மட்டுமே கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இந்த நிலையில் தாளவாடி பகுதியில் இருந்து 2 டன் தக்காளிப் பழங்களை டெம்போவில் ஏற்றிக் கொண்டு விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு சென்றனர்.

தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால் விரக்தி அடைந்த விவசாயிகள் டெம்போவில் இருந்த 2 டன் தக்காளிப் பழங்களை பவானிசாகர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கரையோரம் கீழே கொட்டி விட்டுச் சென்றனர்.

அதிக விளைச்சல் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com