வீடுகளில் 3 நாள்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் 3 நாள்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்தாா்.
எல்.முருகன் (கோப்புப் படம்)
எல்.முருகன் (கோப்புப் படம்)

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் 3 நாள்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னையில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

செஸ் விளையாட்டு தோன்றிய தமிழகத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழா்களுக்குப் பெருமை. இந்தப் போட்டியை பிரதமா் மோடி தொடங்கி வைத்திருப்பது இன்னும் பெருமை. தமிழகத்துக்கு கடந்த முறை பிரதமா் வந்தபோது 5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வை நடத்துவதற்கு சென்னை வந்து சென்றுள்ளாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு அமா்ந்துள்ளாா். ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை 3 நாள்கள் வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றும் இயக்கம் தொடங்கவுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைவரும் வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

நாடு முழுவதும் 24 ஆயிரம் கிராமங்களில் 4 ஜி அலைவரிசையைக் கொடுக்கவுள்ளோம். தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4 ஜி அலைவரிசை கொடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com