அ.குரும்பபாளையத்தில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற விழா

சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
அ.குரும்பபாளையத்தில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற விழா

அவிநாசி: சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

 திருப்பூர் மாவட்டம், வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையத்தில் ஊர்மக்கள் சார்பில், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் வள்ளி கும்மியாட்ட பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது. இதையடுத்து அ.குரும்பபாளையம் குழு வள்ளிக் கும்மியாட்டம் அரங்கேற்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அ.குரும்பபாளையம் ஊர் தலைவர் பி.சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி அறங்காவலர் கே.வெங்கடாசலம், ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கணேசன் ஆகியோர் விழா ஒருங்கிணைத்தனர். காவல் ஆய்வாளர்  சரஸ்வதி வள்ளி கும்மியாட்டம் பயிற்சி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளையும் வழங்கும் காவல் ஆய்வாளர் சரஸ்வதி
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளையும் வழங்கும் காவல் ஆய்வாளர் சரஸ்வதி

நிகழ்ச்சி குறித்து பயிற்சி அளித்த சாமிக்கவுண்டம்பாளையம் வேலவன் வள்ளி கும்மி கலைக்குழு மற்றும் ஆய்வு மைய ஆசிரியர் எஸ்.ஏ.ராமசாமி, நடன ஆசிரியர் எஸ்.ஆர்.விக்னேஸ்குமார் ஆகியோர் கூறியதாவது,

’’குழு சார்பில் இது வரை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமே இடம் பெற்று வந்த  வள்ளி கும்மியில், வேலவன் குழு சார்பில் முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு முதல் பெண்களையும் இணைத்து இக்கலையை வளர்த்து வருகிறோம். மேலும் அ.குரும்பபாளையத்தில் நடைபெற்ற பயிற்சியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் இரு மாதங்களாக பயிற்சி பெற்று பாரம்பரியத்தை மீட்டுள்ளனர்.

நிறைவாக சனிக்கிழமை நடைபெற்ற அரங்கேற்றத்தில், வள்ளி பிறந்தது முதல் முருகனை திருமணம் செய்து கொண்டது வரையிலான கதை, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, மது, புகைப்பிடித்தல் ஒழிப்பு,  பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலை விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து நடனம், பாடல் வடிவில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சாமி கதைகள் ஆகியவை மேளங்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது’’ என்றனர். மாலை தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com