செங்கல்பட்டு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ராமபாளையம், காட்டு நாயக்கன் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நூதன ஆலய பரிவார ஜுர்னோதாரன அஷ்டபந்தன  மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
செங்கல்பட்டு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ராமபாளையம், காட்டு நாயக்கன் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நூதன ஆலய பரிவார ஜுர்னோதாரன அஷ்டபந்தன  மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம் சின்னியம்பாளையம் காட்டு நாயக்கன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான புனரமைக்கும் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருக்கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் கோயில்  நிர்வாகிகள், விழா குழுவினர் கும்பாபிஷேகத்திகான ஏற்பாடுகள் செய்தனர்.

கோயில் திருப்பணிகள் சாஸ்த்ரா முறைப்படி செய்யப்பெற்று ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலமுருகன், பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமூண்டீஸ்வரி,ஆகிய கன்னிமார்கள் மகா விஷ்ணு துர்கா தேவி மதுரைவீரன் வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் உள்ளிட்ட ஏனைய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

மஹாகும்பாபிஷேக விழாவையொட்டி மே 30ந் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை ஸங்கல்பம், கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் , வாஸ்து சாந்தி, தனபூஜை, மூலமந்திரம், அவதாரிகை, யந்திரப்ரதிஷ்டை, அஷ்டபந்தம் சாற்றுதல், யாகசாலை, நாடி சந்தானம் உள்ளிட்ட ஐந்து காலபூஜைகளுடன் பூர்ணிஹூதி மாஹா தீபாரதணையுடன் கலச புறப்படுதல் விமான கோபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன், பரிவார தேவதைகள் மஹா கும்பாபிஷேகம், முத்து அருளாளர் வீரராகவன் செம்மலை அருளாளர் சாரங்கபாணி சுவாமிகள் ஆகியோர் ஆசியுடன் கருங்குழி ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவனம் அருளாளர் ஸ்ரீ ரகோத்தம சுவாமிகள், ஈச்சங்கரணை மகா பைரவர் ஆலய பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் தென்எலப்பாக்கம் சித்தர் பீடம் எஸ்.கிருஷ்ணன்சுவாமிகள், செங்கல்பட்டு இராமபாளையம்,முத்துமாரியம்மன் கோயில் டி.பாலக்குமார், திருக்கழுக்குன்றம் புலவர் சிவ அருள்மணி, முருகனடிமை தனசேகர் அடியார் செங்கல்பட்டு கொல்லிப்பாவை அம்மா சேவகர் கே நடராஜன் சுவாமிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து புண்ணிய தீர்த்தம் பிரசாதம் வழங்குதல், தாய் வீட்டு சீர் எடுத்து வருதல், மஹா தீபாராதனை பிரசாதம் வழங்குதல், சமபந்தி போஜனம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை காட்டு நாயக்கன் தெரு ராம பாளையம் ஆலய நிர்வாகிகள், ஆலய விழாக் குழுவினர்கள், ஆலய அறங்காவலர்கள், தமிழ்நாடு செட்யூல்டு ரைட்ஸ் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com