இடையப்பட்டி மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி வில்வனூர் மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி வில்வனூர் மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் இடையப்பட்டி வில்வனூர் கிராமத்தில் கரியக்கோயில் ஆற்றங்கரையில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத மாயவப் பெருமாள் திருக்கோயகல் அமைந்துள்ளது. இக்கோயில், இடையப்பட்டி மற்றும் வில்வனூர் கிராம மக்களின் முயற்சியால் மகாமண்டபம் ராஜகோபுரத்தோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை வெகு விமர்சியாக நடைபெற்றது யாகசாலை பூஜைகளுக்கு பிறகு ராஜகோபுரம் மற்றும் மாயவப் பெருமாளுக்கு புனிதநீர் ஊற்றி வேதவிற்பன்னர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

இந்த விழாவில், இடையப்பட்டி, வில்வனூர், புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இடையப்பட்டி  மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com