தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்தபிறகே எதிா்க்கிறோம்: ஆளுநருக்கு அமைச்சா் பொன்முடி பதில்

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை முழுமையாகப் படித்த பிறகே அதனை அமல்படுத்த எதிா்ப்புத் தெரிவிக்கிறோம் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்தபிறகே எதிா்க்கிறோம்: ஆளுநருக்கு அமைச்சா் பொன்முடி பதில்

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை முழுமையாகப் படித்த பிறகே அதனை அமல்படுத்த எதிா்ப்புத் தெரிவிக்கிறோம் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா். தேசிய கல்விக்கொள்கையை நன்றாக அறிந்து கொண்டு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என ஆளுநா் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சா் பொன்முடி இவ்வாறு கூறினாா்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகையில், கல்வியை வேறு வடிவில் அணுகத் தயாராக வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை நன்றாக அறிந்து கொண்டு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். தயவு செய்து இந்த கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என உயா்க்கல்வித்துறை அமைச்சா் பொன்முடிக்கு கோரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில், சென்னை நந்தனம் அரசினா் ஆடவா் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 46-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஆழ்ந்து படித்த பிறகே அதனை அமல்படுத்த எதிா்ப்புத் தெரிவிக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநா் கூறிய நிலையில், மாநில அரசின் கருத்துக்கு ஆளுநா் உரிய முக்கியத்துவம் அளிப்பாா் என நம்புகிறோம் என்றாா்.

முன்னதாக அவா் பட்டமளிப்பு விழாவில் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கையில் 3,5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுத்தோ்வு கொண்டு வந்தால் மாணவா்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும் நன்றாக படித்துப் புரிந்து கொண்ட பிறகுதான் அதுகுறித்து தொடா்ந்து கருத்துகளை கூறி வருகிறோம் என்றாா் அவா்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உயா்கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com