மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தலைமை செயலகத்தில் 19 துறைகளின் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களிடம் நம் மீதான    எதிர்பார்ப்பு மிகப்பெரியளவில் உள்ளது என்று முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்  (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை: தலைமை செயலகத்தில் 19 துறைகளின் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களிடம் நம் மீதான    எதிர்பார்ப்பு மிகப்பெரியளவில் உள்ளது என்று முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும். சாலை அமைத்தல், குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகளவில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், திட்டங்களை நிறைவேற்றும்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் மற்றும் கள ஆய்வு செய்து மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். நடப்பாண்டில் வெளியிட்ட அறிவிப்புகள் மீது நடவடிக்கை எடுத்து, இம்மாத இறுதிக்குள் அரசாணை வெளியிட வேண்டும். 

மக்கள் நம் மீது அதிகமான அளவுக்கு  எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.  மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கும் நலம் பயக்கும் திட்டங்களில் எந்த தொய்வும், தாமதமும் இன்றி பணியாற்ற வேண்டும் என்று தலைமை செயலகத்தில் 19 துறைகளின் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com