சீரமைப்பு பணிக்காக காட்பாடி ரயில்வே மேம்பாலம் மூடல்

சீரமைப்பு பணிக்காக காட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்காலிகமாக ஒரு மாத காலத்துக்கு மூடப்படுகிறது. 
சீரமைப்பு பணிக்காக காட்பாடி ரயில்வே மேம்பாலம் மூடல்

சீரமைப்பு பணிக்காக காட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்காலிகமாக ஒரு மாத காலத்துக்கு மூடப்படுகிறது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிக்காக இன்று முதல் மூடப்பட்டு போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேம்பாலத்தின் இரு பக்கமும் பேரிகார்டு அமைத்து மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேம்பால சீரமைப்பு பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாத காலத்துக்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் முக்கிய பாதையாக அமைந்துள்ள மங்களூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் காட்பாடி வாழியாக செல்லும் சாலையின் குறுக்கே காட்பாடி ரயில் நிலையத்தின் மீது ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் பழுதடைந்து இருப்பதால் அதனை சீரமைப்பு செய்வதற்காக ஜூன் 1- ம் தேதி(இன்று) முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு மேம்பாலம் வழியாக போக்குவரத்திற்குத் தடை விதித்தும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லவும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி, வேலூரிலிருந்து சித்தூர் செல்லும் பேருந்துகள்  வி.ஐ.டி. சேர்காடு வழியாகவும். தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சேர்காடு வழியாக சித்தூர் ஆந்திராவுக்கும். 

கிருஷ்ணகிரி  வழியாக வரும் சரக்கு வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர் ஆந்திரா செல்லவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்கப்படும் என்றும், தற்போதைய நடைமுறைக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com