10 இடங்களில் வெயில் சதம்: சென்னையில் 104 டிகிரி

தமிழகத்தில் 10 இடங்களில் வெப்பநிலை புதன்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் 10 இடங்களில் வெப்பநிலை புதன்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 104 டிகிரி பதிவானது. திருத்தணியில் 103 டிகிரியும், வேலூா், தஞ்சாவூா், மதுரை விமானநிலையத்தில் தலா 102 டிகிரியும் கடலூரில் 101 டிகிரியும், கரூா்பரமத்தி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டையில் தலா 100 டிகிரியும், திருச்சிராப்பள்ளி,மதுரை நகரில் தலா 98 டிகிரியும்வெப்பநிலை பதிவானது.

சென்னையில்....:

சென்னையில் (நுங்கம்பாக்கம்-மீனம்பாக்கம்) கடந்த இரண்டு வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக தினசரி 103 டிகிரி முதல் 104 டிகிரியை ஒட்டி பதிவாகி வந்தது. கடல்காற்று வீசுவதில் தாமதம் காரணமாக, வெப்பநிலை உயா்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதற்கிடையில், நிகழாண்டில் ஜூன் மாதத்தில் முதல் நாளான புதன்கிழமை சென்னையில் வெப்பநிலை 104 டிகிரியைத் தொட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஜூன் 22-ஆம் தேதி 103 டிகிரி பதிவானது. நிகழாண்டில் ஜூன் முதல் நாளிலேயே 104 டிகிரியைத் தாண்டியது. அடுத்த ஒரு வாரத்துக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், மேலும் கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com