ஆவடியில் ஜூன் 10 முதல் 3 நாள்கள் உணவுத் திருவிழா: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவுத் திருவிழா வருகிற 10 -ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இலச்சினைகளை (லோகோ) பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வ
ஆவடி டேங்க் பேக்டரி மைதானத்தில் வருகிற 10 -ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை உணவுத் திருவிழா நடக்கிறது. இதற்கான இலச்சினைகளை (லோகோ) பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டார்.
ஆவடி டேங்க் பேக்டரி மைதானத்தில் வருகிற 10 -ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை உணவுத் திருவிழா நடக்கிறது. இதற்கான இலச்சினைகளை (லோகோ) பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டார்.

ஆவடி: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவுத் திருவிழா வருகிற 10 -ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இலச்சினைகளை (லோகோ) பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டார்.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பாக உணவுத் திருவிழா- 2022 வருகின்ற 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட ஆவடி டேங்க் பேக்டரி மைதானத்தில் நடைபெறுகிறது.  

இதனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா -2022 மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஆகிய இலச்சினைகளை (லோகோ) ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசியதாவது: 

திருவள்ளூர் மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து நமது மாவட்டத்தில் வித்தியாசமான ஒரு உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. இதில், உணவு உண்ணும் போட்டியும், உணவு சமைக்கும் போட்டியும் நடைபெறுகிறது.  உணவுத் திருவிழாவில் இதுவரை இல்லாத அளவில் உள்ளூர் உணவகம் முதல் உலக நாட்டு உணவுகள் வரை சுமார் 150 உலகப் புகழ்பெற்ற உணவகங்களின் அறுசுவை அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. 

தமிழ்நாட்டில் தலைசிறந்த உணவகங்கள், வெளி மாநில, வெளிநாட்டு உணவகங்கள் அந்தந்த மண்ணின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உபசரிப்பையும், உணவையும் வழங்க உள்ளனர். 

மூன்று நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் 3 உலக சாதனைகள் நடைபெறவிருக்கின்றன. உலகில் உயரமான பலுடா ஐஸ்கிரீம், உணவை வீணாக்காமல் பகிர்வோம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்குதல், உபயோகத்த எண்ணெயில் மறுபயன்பாடு என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கிலோ லிட்டர் பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து "பயோ டீசல்" தயாரிக்க வழங்குதல் ஆகிய செயல்பாடுகளில் புதிய உலக சாதனைகள் படைக்கப்படவுள்ளது. 

மேலும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதமாக உணவு அரங்கங்களும், கலைநிகழ்ச்சிகள், நட்சத்திர பட்டிமன்றம், சொற்பொழிவு, பாட்டு பட்டிமன்றம் என மேடை நிகழ்ச்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சமையலில் ஆர்வம் உள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளும் பங்குபெறும் வகையில் 10 தலைப்புகளில் சுவையான சமையல் போட்டிகளும் சுவாரசியமான சாப்பாட்டு போட்டிகளும் நடைபெறும். 

போட்டிகளில் வென்றவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய பரிசுகளும், அறுசுவை அரசி, அரசன், இளவரசி மற்றும் இளவரசன் என்ற பட்டங்களும் வழங்கப்பட உள்ளது. 

போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் பரவசப்படுத்தும் விதத்தில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றார். 

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கே.ஜெயக்குமார் எம்.பி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com