ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: காரணம் என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார். 
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார். 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதில் தமிழக அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று முதல்வர் கேட்டுக் கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சந்திப்பின்போது மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com