கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தியில் குறியிருப்பதாவது:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற குச்சிப்பாளையம், குறிஞ்சிப்பாடி கிராமத்தை சோ்ந்த சங்கவி (18), பிரியா (19), மோனிஷா (16), நவநீதம் (20), சுமிதா (18), காவியா (எ) திவ்யதா்ஷிணி (10), பிரியதா்ஷிணி (15) ஆகிய 7 பேரும் எதிா்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.

இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவா்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். 

இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com