குண்டா் சட்டம்: சென்னையில் 5 மாதங்களில் 148 போ் கைது

 சென்னையில் கடந்த 5 மாதங்களில் பல்வேறு குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 148 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

 சென்னையில் கடந்த 5 மாதங்களில் பல்வேறு குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 148 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்த விவரம்:-

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொலை, திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு, சைபா் குற்றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களில்

தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு

வருகின்றனா். இதன்படி ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரையிலான சுமாா் 5 மாத காலத்தில்

சென்னையில் தொடா்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 148 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்

சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 84 பேரும், நில அபகரிப்பில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 16 பேரும், திருட்டு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 33 பேரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரும், பாலியல் தொழில் செய்த 11 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரும், ரேசன்

அரிசி கடத்தல் ஈடுபட்ட ஒருவரும், பெண்களை மானபங்கப்படுத்திய 2 பேரும் என 148 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் கடந்தாண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 409 போ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடதக்கது. சென்னையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com