திருவிழாவின்போது சாய்ந்த ராட்டினம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்து ராட்டினம் சாய்ந்து நேரிட்ட விபத்தில் மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவிழாவின்போது சாய்ந்த ராட்டினம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்
திருவிழாவின்போது சாய்ந்த ராட்டினம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்து ராட்டினம் சாய்ந்து நேரிட்ட விபத்தில் மக்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதையும் படிக்க.. திருடிய லாக்கரை நகைகளோடு குப்பைத் தொட்டியில் வீசிய திருடர்கள்: ஏன்? எதற்கு?

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தில் வைகாசி மாதம் ஆண்டு தோறும் கங்கை அம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே பல்லலகுப்பம் கங்கை அம்மன் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. 

இதனிடையே கங்கையம்மன் திருவிழாவிற்கு அமைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்ததில் ரங்க ராட்டினம் சாய்ந்தது. அப்போது ராட்டினத்திலிருந்த 20க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். ரங்கராட்டினம் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து மேல்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com